அரசு ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு சார்பில் 2 நாட்கள் போராட்டம் நடைபெறுவதால் கேரளாவில் பேருந்துகள் இயங்கவில்லை. இதனையடுத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனால் கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நாட்களில் நடக்க இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.