பெரும் எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த வருடத்துக்கான நீட்தேர்வு நடந்துமுடிந்து சென்ற இரு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாகிய தினத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போல் இருப்பதாகவும், மாணவர்கள் எவ்விதமான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதில் மிக கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்நத்தாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்தார். இந்நிலையில் அச்சமடைந்தது போல் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகிய மறு நாளில் சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நீட்தேர்வு எழுதிய மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் முதலில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதற்குரிய சில வழிகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.
உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன..?
# தங்களது பிள்ளைகளின் மனஓட்டத்தை புரிந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்ட வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.
# நீட்தேர்வு முடிவுகளானது வெளியாகிய நிலையில், மாணவர்களை மனம்தளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.
# பல மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்திருப்பது என்னவோ இந்த ஒற்றை தேர்வுக்குள் தான். நீட் என்ற இந்த ஒற்றை தேர்வால் உங்களது மருத்துவ துறை ஆர்வத்தை சிதைத்து விட முடியாது என்பதே உண்மை. இதனை புரிந்துகொண்டாலே போதும், எதையும் சாதிப்பது மிக எளிதாகும்.
# பொதுவாகவே நாம் நினைத்த ஒன்று நடைபெறாவிட்டால் மனம்தளர்ந்து போகக்கூடும். அந்த சமயத்தில் நாம் தவறான முடிவுகளை அறியாமலேயே எடுத்துவிட நேரிடலாம். இதன் காரணமாக தான் தேர்வுமுடிவுகள் வெளியான முதல் 72 மணி நேரம் மிக முக்கியமானது ஆகும்.
# ஒரு வேளை மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டால் மன தத்துவ நிபுணரை சந்தித்து மனம்விட்டு பேசினால் அதிலிருந்து விடுபட முடியும்.
# பல்வேறு மாணவர்கள் 2 , 3 முறை தேர்வு எழுதி வெற்றிபெற முடியாமல் மனம் சோர்வடைகின்றனர். அந்த சமயம் பெற்றோர்கள் அவர்களை மனம் தளராதவாறு ஊக்கப்படுத்தி அவர்களை சாதாரண மனநிலைக்கு கொண்டுவர வேண்டும்.
# குறிப்பாக தங்களது பிள்ளைகளின் மனஓட்டத்தை புரிந்து கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்ட வேண்டியது பெறோருடைய கடமை ஆகும். இதனை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்து கொண்டாலே மாணவர்களின் வெற்றிப் பயணம் தங்கு தடையின்றி தொடரும்.