மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு. நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றோடு நிறைவடைகிறது. எனவே தகுதியான மாணவ மாணவிகள் இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் இன்றோடு முடிவடைவதால் மாணவ மாணவிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.