டெல்லியில் கோடை விடுமுறை முடிவடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் புதிய மதிப்பீட்டு முறையானது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலமாக மாணவர்களின் படிப்பு மற்றும் மற்ற திறன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அதன் பிறகு மாணவர்களின் சமூக உணர்ச்சி, நெறிமுறை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன்களுக்கும் மதிப்பீடு முறை உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீடு முறையின் படி 3 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் தேசபக்தி பாடங்களுக்கு மதிப்பீடு செய்யப்படுவார்கள். இதனையடுத்து 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேசபக்தி மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மை பாடங்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்கள் பிசினஸ் பிளாஸ்டர்சஸ் குறித்த பாடங்களுக்கும் மதிப்பீடு செய்யப்படுவார்கள் .