சிவகங்கையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாமானது நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே இருக்கும் அமராவதி புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமானது நடந்தது. இப்பயிற்சி முகாமிற்கு கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி வரவேற்க கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தை எவ்வாறு எளிதாக புரிய வைப்பது என்பது பற்றி திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர்கள் கண்ணன் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினார்கள். இக்கூட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரம்யா, கல்லூரி முதல்வர் நன்றி உரையாற்றினார்கள்.