மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குவிண்ணப்பம் பத்தாம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவம் சார்ந்த அனைத்து படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுவது பற்றி மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி ஆன்-லைன் மூலமாக கலந்தாய்வு தொடங்குகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பொது பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மயக்கவியல், ரேடியாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு 38,244 பேர் விண்ணப்பித்தலில், 37,334 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளில் 1,590, சுயநிதி கல்லூரிகளில் 13,858, அரசு ஒதுக்கீட்டில் 21,320 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகின்றது. மேலும் tnhealth.gov.in என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.