யுனெஸ்கோ நடத்தும் புகைப்படப் போட்டியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற அறிவுறுத்துமாறு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜவுளி மற்றும் துணி வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய இரு தலைப்புகளில் இந்த புகைப்பட போட்டி நடைபெற உள்ளது.
எனவே மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்பது, விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை unescosilkroadphotocontest.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.