தமிழகம் முழுவதும் பொது தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் முதல மாதம் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ‘தமிழ்நாடு நாள்’ விழாவைமுன்னிட்டு 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 7ஆம் தேதி கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டிகள் தமிழ்நாடு உருவான விதம், தமிழ்நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகள், மொழிவாரி மாநிலம் மற்றும் சங்கரலிங்கனார் ஆகிய தலைப்புகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.