நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வுகள் பள்ளிகளில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் இந்த நெருக்கடியான சூழ்நிலைகளில் தேர்வு எழுத தயாராக இல்லை என நினைக்கிறேன். மாணவர்கள் சார்பாக நான் இந்த கோரிக்கை முன் வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.