Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது…? – வெளியான முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் கடந்த வருடமே மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்த வருடமும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தேர்வுகளும் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் தனித்தேர்வர்களுக்கு(Private candidate) கொரோனா கட்டுக்குள் வந்த பின் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தற்போது தேர்வு நடத்துவது சாதாரணமான விஷயமல்ல. முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |