Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… பொதுத் தேர்வில் மாற்றம்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது போல எளிய வகையில் தேர்வுகள் இருக்கும். பொதுத்தேர்வில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி முதல்வரின் அனுமதி பெற்று முறையான அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |