உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்கள் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி இதுவரையிலும் 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.