பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சேர்க்கை அளிக்க தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சேர்க்கை அழிக்க தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. வருகைப் பதிவு இல்லாததால் இடைநின்ற மாணவர்களுக்கு கல்லூரியில் மீண்டும் சேர்க்கை அளிக்கப்படும். முழுநேர படிப்பில் சேர்க்கை பெற்றவர்களுக்கு 6 ஆண்டுகள் வரையும், பகுதிநேர மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கப்படும். உடல்நலக்குறைவால் தேர்வு எழுதாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் படிப்பைத் தொடரலாம் என கூறியுள்ளது.