புதுச்சேரியில் அடுத்த கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அதற்கென தனியாக கல்வி வாரியம் இல்லாததால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றது. இதனை தொடர்ந்து 2014 – 15 ஆம் கல்வி ஆண்டு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி படிப்படியாக கடந்து 2018 – 19 ஆம் கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆனால் ஆறாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவரப்படவில்லை. அதனால் ஐந்தாம் வகுப்பில் சிபிஎஸ்இ படித்த மாணவர்கள் ஆறாம் வகுப்பில் தமிழக பாடத்திட்டத்தை படிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதன் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத் திட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது புதுச்சேரி முழுவதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது.
இது தொடர்பாக புதுவை பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டால் அது மேலும் இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் பேசியபோது புதுச்சேரியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை என அனைத்து வகுப்பினருக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் இதற்கு வழிகாட்டுதல்களும் பெறப்பட்டிருக்கிறது மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தபின் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் இதற்கான பணிகள் முடிவடையாது என்ற காரணத்தினால் அடுத்த கல்வியாண்டில் புதுச்சேரியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டமாக மாற அதிக அளவு வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.