Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….. செப் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு…..!!!!

இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு கடந்த மாதம் 17ல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.  18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி பகல் 12 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வுகள் முகமை தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |