மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று(மார்ச் 31) மாலை வரை UGC நீட்டித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் M.Phil., Ph.D. பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி M.Phil, Ph.d பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய பெல்லோஷிப் (NFPwD) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை UGC நீட்டித்துள்ளது.
இந்நிலையில் தகுதியுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற மார்ச் 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, M.Phil, Phd படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் https://www.ugc.ac.in/ugc%20schemes என்ற இணையதள முகவரி வாயிலாக இன்று (மார்ச் 31) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுபோக இதர செலவுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1,2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 3-ஆம் ஆண்டு முதல் ரூ.35,000 மற்றும் ரூ.25,000 வழங்கப்படும் எனவும் கடந்த மாத இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.