தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, “தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் அனுமதி பெற்று நடத்தி கொள்ளலாம்” என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.