Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பட வேலைக்கு அனுமதி வழங்கி பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. அதன்படி இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை போன்றவற்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல்  குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்திற்கும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடற்கல்வி பாடவேளைக்கு  அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி மறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |