நாளை மறுநாள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது. இந்த திருப்புதல் தேர்வை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் முதல்முறையாக திருப்புதல் தேர்வுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் அரசு தேர்வுத்துறை வழியே வழங்கப்பட உள்ளது.
மேலும் தேர்வுத்துறையின் அனைத்து வகையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொது தேர்வு எப்படி நடத்தப்படுமோ அதேபோலவே 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் அந்தந்த பள்ளிகள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யக்கூடாது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முதன்மை கல்வி அலுவலக அறிவுறுத்தலின் படி மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.