Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு…. நிம்மதியா இருங்க…!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை திறக்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது தொடர்பாக விரைந்து முடிவுகளை எடுக்க மத்திய மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கூறி டெல்லி மாணவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். பள்ளிகளுக்கு சென்று பயில முடியாததால் மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், அனைத்து மாணவர்களின் சார்பாகவும் தான் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்து இருப்பதாக மாணவர் விளக்கம் அளித்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாடு முழுவதும் பள்ளிகளை திறக்குமாறு நீதிமன்றம் அதிரடியாக ஒரு உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது உள்ள சூழலில் பள்ளிகளை திறக்குமாறு நீதித்துறை வாயிலாக உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அரசுகளும் அதிகாரிகளுமே சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மாணவர்கள் இதுபோன்ற வழக்கை தொடராமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |