தமிழக அரசின் சார்பாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் வருடம் முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காரணமாக லேப்டாப் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து இலவச லேப்டாப் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
இதன் எதிரொலியாக 2019 ஆண்டு முதல் கடந்த மூன்று வருடங்களாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாதாமல் இருப்பதால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே இந்த கல்வி ஆண்டிலாவது ஏற்கனவே வழங்கப்படாமல் இருக்கும் மாணவர்களுக்கு சேர்த்து லேப்டாப் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு பதிலாக டேப்லெட் வழங்க தமிழக அரசு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லேப்டாப்பிற்கு 15,000 வரை செலவாகும் எனும் பட்சத்தில் அதே டேப்லெட் என்றால் 7 ஆயிரத்தில் முடித்துக் கொள்ள முடியும்.