Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. “தேசிய அளவிலான போட்டி தேர்வுகள்” சென்னை ஐஐடியின் புதிய திட்டம்….!!!!

சென்னை ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் JEE நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஐஐடியில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்வதற்காக ஒரு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி நிறுவன இயக்குனர் காமகோடி ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் சென்னை ஐஐடியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஐஐடியில் உள்ள வசதிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு ஐஐடியில் உள்ள வசதிகள் பற்றி மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்களும் எழுகிறது. இதனால் மாணவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் விதத்தில் askiitm.com இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு www.askiitm.com என்ற இணையதளத்தில் பட்டப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உள்ள அனைத்து விதமான தகவல்களையும் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விருப்பப்பட்ட பாடத்தை படிப்பதற்கான வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு ஐஐடி நிறுவனத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் கணக்கு பாடங்களை கற்பித்துக் கொடுக்கும் பேராசிரியர்களின் உதவியோடு 5 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான திறனறிவு போட்டி தேர்வுகள் மற்றும் ஒலிம்பியாட் தேர்வுகளுக்கான பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கான பாடத்திட்டங்களை வடிவமைத்து கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்த பாடத்திட்டங்கள் சென்னை ஐஐடியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த இணையதளத்தில் உள்ள பாடத்திட்டங்களை மாணவர்கள் படித்து போட்டி தேர்வுக்கு தயாராகலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |