Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயலிகள் வழியே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை கவனிக்கும் வகையில் தினமும் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனால் நாளை ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |