பயிற்சி மாணவர்களுடன் தரை இறங்க இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
உக்ரைன் நாட்டில் விமானமொன்று பயிற்சி மாணவர்களுடன் விமானநிலையத்திற்கு வந்த சமயம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியில் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதாரத்தை மேற்கோளிட்டு விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் மொத்தம் 21 பயிற்சி மாணவர்களும் 7 குழு உறுப்பினர்களும் பயணம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி விமானம் தரை இறங்கும் சமயம் இன்ஜின் செயலிழந்ததால் ரேடியன் மூலம் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்ததாகவும் அதன் பிறகு விபத்து ஏற்பட்டு 27 ஐந்து பேர் மரணம் அடைந்ததும் தெரியவந்துள்ளது.மேலும் விமானத்தில் பயணம் செய்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அதோடு சுகுவேவை சேர்ந்த விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.