நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையாததால், கடந்த ஒரு வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியது.
இதன் விளைவாக தற்போது பாதிப்பு சில நாட்களாகவே சற்று குறைந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ஆகியவை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்றும், கூடிய விரைவில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.