Categories
உலக செய்திகள்

“மாணவர்களே..!” அடுத்த மாதத்திலிருந்து இது கட்டாயம் இல்லை… பள்ளி அமைச்சர் அறிவிப்பு…!!

பிரிட்டனில் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு திரும்பும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை என்று பள்ளி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அடுத்த மாதம் முதல் வகுப்பிற்கு திரும்பும் போது முகக்கவசம் அணிதல் மற்றும் அறிகுறி இல்லாமலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது போன்றவை கட்டாயம் இல்லை என்று பள்ளி அமைச்சரான Nick Gibb தெரிவித்துள்ளார். அதாவது வகுப்பினுள் முகக்கவசம் அறிந்து கொண்டே கற்பித்தல் என்பது சாத்தியமில்லாதது என்று கூறியுள்ளார்.

எனினும் முகக்கவசம் அணிந்து கொள்ள அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் மார்ச் 8 ஆம் தேதியிலிருந்து வகுப்புகள் திரும்ப ஆரம்பிக்கப்படும் போது இடைநிலைப் பள்ளி குழந்தைகள் வழக்கம்போல் அவர்களாகவே முன்வந்து உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர்களது பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதனை கட்டாயமாக செயல்படுத்த முடியாது எனினும் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு முறை பரிசோதிக்க அனுமதிப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அதாவது முதல் இரண்டு வாரங்களில் மேல்நிலை பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  பள்ளியில் மூன்று சோதனைகளும் வீட்டில் ஒரு சோதனையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும். அதன் பின்பு வாரத்திற்கு இரண்டு முறை வீட்டிலேயே பரிசோதனையை மேற்கொள்ள கருவிகள் அனுப்பப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |