Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! ஆன்லைனில் வேலைவாய்ப்புக்கு…. பதிவு செய்வது எப்படி….? இதோ உங்களுக்காக….!!!!!

வேலை வாய்ப்புபதிவுகள் பள்ளிகளில் இனி பதிவு செய்யப்பட மாட்டாது என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. முன்னதாக பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ் வாங்கும்போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் (www.tnvelaivaippu.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் புதிய பயனாளர் என்பதை கிளிக் செய்து பெயர், இருப்பிடம், பிறந்த தேதி, ஆதார், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும். பிறகு கல்வித் தகுதி, தனிமனித விவரம், சான்றிதழ்கள், திறன் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கவும். அடுத்து உங்களுக்கான பதிவு எண் உருவாகிவிடும், இந்த பதிவு எண் மூலம் உங்கள் தகுதிகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |