தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி பொது தேர்வை எழுத உள்ளார்கள். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாகவே முழு பாடத்திட்டமும் மாணவர்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை தேர்வு தொடங்கி பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் பள்ளிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மாணவர்கள் Bonafide சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தால் மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்த சான்றிதழை வாங்க முற்பட்டனர். எனவே இதன் காரணமாகபல சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனால் Bonafide சர்டிபிகேட் கட்டாயம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.