Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! “இது ரத்து” பள்ளிக்கல்வித்துறை திடீர் அதிரடி அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வுகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் உயர்நிலை வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுத்து அந்தந்த பிரிவில் சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் விருப்ப பாடமாக தேர்வு செய்வதற்கான தனிக்கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்து தனி கட்டணமாக ரூபாய் 200 வசூலிப்பது ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |