Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே இதெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… நாளை திறக்கப்படும் பள்ளிகள்…. வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்…!!!

டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கு செப்டம்பர் 1ஆம் தேதி பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லி மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ளதாவது:

வகுப்பறையில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை மாலை என இரண்டு வகுப்புகள் நடத்தப்படும்.

மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் உணவு, புத்தகங்கள், பென்சில் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது.

உணவு இடைவெளியின் போது மாணவர்கள் திறந்த வெளியில் வைத்து சாப்பிடவேண்டும். ஒரே நேரத்தில் அதிக அளவில் மாணவர்கள் இணைந்து சாப்பிடக்கூடாது.

மாற்று இருக்கைகள் தயார் செய்யவேண்டும்.

பள்ளிக்கு வர பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் கட்டாயம்.

பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாவிட்டால், மாணவர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பள்ளி வளாகத்திற்குள் தனிமைப்படுத்தப்படும் அறை அமைக்கப்படும். அவை அனைத்தையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

கழிவறையில் சோப்பு, தண்ணீர் கட்டாயமாக இருக்க வேண்டும். அதேபோல் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, மாஸ்க் போன்றவை இருக்க வேண்டுமென்ற நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |