Categories
உலக செய்திகள்

“மாணவர்களே!” இதெல்லாம் செய்யணுமாம்… கல்விஅமைச்சகம் வெயியிட்ட தகவல்.. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையா..?

பிரிட்டனில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அனைத்து பள்ளிகளும் வரும் மார்ச் 8ஆம் தேதியன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சகம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் கல்வி அமைப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்துவது என்பது நடக்காத காரியம் என்றும் மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்வதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவ தளமாக பள்ளிகளை மாற்றாமல், அதற்கு பதில் மாணவர்களுக்கு சோதனை கிட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும் என்று பள்ளி மற்றும் கல்லூரி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களே வாரத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமுறைகளின்படி மேல்நிலை பயிலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் பாடம் நடத்தப்படும் நேரங்களை தவிர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பள்ளி பாதுகாப்பு திட்டம் தொடர்பான விவரங்களை கல்வி அமைச்சகம் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடயிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |