Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இனிமே இப்படி இருங்க…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். பிரிவு வாரியான பட்டம்-பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. HCL நிறுவனம் அரசு பள்ளி மாணவர்கள் 2500 பேரை தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி கடவுள் நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொறியியல், மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகளை மட்டும் கனவாக நினைத்து நின்றுவிட வேண்டாம். பல்வேறு துறைகள் உள்ளது. அதை தேர்ந்தெடுத்து படித்து நிபுணத்துவம் பெறவேண்டும். உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து அதில் உங்களின் முழு உழைப்பை செலுத்த வேண்டும். கல்லூரி காலத்தில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது மிகவும் முக்கியம். படிப்பு பகுத்தறிவு கொண்டதாக இருக்க வேண்டும். யாருடனும் உங்களை ஒப்பீடு செய்து கொள்ளாதீர்கள் . கல்வியை சிறுமைப்படுத்தி பேசுபவர்களின் பேச்சை காதில் வாங்காதீர்கள்.உங்களின் வளர்ச்சியை பார்த்து பெருமை கொள்ளும் தந்தையாக உங்களில் ஒருவனாக நான் நிச்சயம் இருப்பேன். படியுங்கள் படியுங்கள் பகுத்தறிவோடு படியுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |