Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இனி இ-சேவை மையங்கள் மூலமாக…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவே இனி மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் வாயிலாக பெற்றுக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, 23 வகையான பள்ளி சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை அமல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இனி மாணவர்கள், பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவே தங்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாம்.

Categories

Tech |