பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், CM தொடங்கி வைத்த நான் முதல்வர் திட்டத்தின் நோக்கமே, படிக்கும் போது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுதான் என்று கூறினார். அதன் முன்னெடுப்பாக தான் தற்போது ஆறு தனியார் தொழிற்சாலை நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு கல்லூரியில் உதவி கவுரவ விரிவுரை யாளராக பணிபுரிந்து வந்தாலும் கட்டாயம் தேர்வு எழுதிய பிறகு தான் பணியமர்த்தம் செய்யப்படுவார்கள். பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் விவகாரத்தில் தனியாக அறக்கட்டளை நடத்தி அதன் கீழ் பேராசிரியர்கள் நியமனம் செய்து வருவதால் உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.