தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் 9,10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளை 3:30 மணிக்குள் முடிக்க வேண்டும். 40- 45 நாட்களுக்குள் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே வழங்கப்படும்.
வகுப்பறையில் மேஜையின் ஒரு முனையில் ஒரு மாணவரும், மற்றொரு முனையில் மற்றொரு மாணவரும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முதல் நாளில் இருந்தே பாடம் நடத்தப்பட மாட்டாது. மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பிறகே பாடம் நடத்தப்படும். எனவே பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.