உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூலமாக இலவச சீருடை, புத்தகம், காலணிகள் உள்ளவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப் பைகள், சுவெட்டர் ஆகியவை இனி பள்ளிகளில் வழங்கப்படாது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த பொருட்களை வாங்க மாணவர்களின் பெற்றோர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதற்காக 1800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 1.6 கோடி மாணவர்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.