கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் கேரளாவில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
அதை தொடர்ந்து ஜனவரி 22, 31 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஞாயிறு தோறும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
மேலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணையில் செயல்பட்டது போல வழக்கமாக மாலை வரை வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையற்ற மோனோகுளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது