பிஇ, பி.டெக் போன்ற படிப்புகளுக்கு துணை கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு 1, 39,033 தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடந்தது. இதையடுத்து பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்கியுள்ளது.
அதன் பின்னர் இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக நடப்பாண்டில் ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பெயர்களை பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டணம் செலுத்தி கல்லூரியை உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 2021-2022 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அனைத்து விவரங்களும் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பி.இ, பிடெக் போன்ற படிப்புகளில் சேர்வதற்கான துணை கலந்தாய்விற்கு நாளை விண்ணப்பிக்க வேண்டும்.
இதுபற்றி தொழில் நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் சேர்க்கை 2021-2022 ஆம் ஆண்டு பொது கலந்தாய்வின் முடிவில் நிரப்பப்படாமல் இருக்கின்ற பொது தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத, தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயும், எஸ்சி எஸ்டி மாணவர்கள் 250 ரூபாயும்,செலுத்தி www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளம் மூலமாக நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது பற்றிய தகவல்களுக்கு இணையதளத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் மேலும் 0442912081 மற்றும் 828384 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்க பட்டுள்ளது.