Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு….. இதெல்லாம் முக்கியம்….. மறந்துடாதீங்க….!!!!

இன்று நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த சில தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி

தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது.

  • தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு 8:30 மணிக்கு வந்துவிடவேண்டும் .
  • 9 மணிக்கு மேல் வருபவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்படமாட்டாது.
  • தேர்வு 9:30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெறும்.
  • ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் மற்றும் ஒரிஜினலை எடுத்து வைக்கவேண்டும்.
  • தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும்,  75 கேள்விகள் பொதுஅறிவு, 75 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
  • தேர்வு எழுதுவதற்கு ஓஎம்ஆர் ஷீட் வழங்கப்படும். அது உங்களுடையது தானா என்பதை நீங்கள் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தேர்வு எழுதும் இடத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு எழுதுவதற்கு கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
  • ஆய்வாளர்கள் சரிபார்க்கும் போது முககவசத்தை அவிழ்த்து விட்டு மற்ற நேரம் முக கவசம் அணிந்து தேர்வு எழுத வேண்டும்.
  • குரூப் 2 தேர்வின் முதல் நிலை முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு,இரண்டாம் கட்ட தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும். இதன் முடிவு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |