Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இன்று முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையத்தள விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

இணையத்தள விண்ணப்ப பதிவிற்கான கடைசி நாள் நவம்பர் 8 மாலை 5 மணி. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணி என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதனை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |