தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக்கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு, பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு மத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 12ஆம் தேதி தொடங்குவதாகவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதுமட்டுமன்றி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.