பகுதிநேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் செப்டம்பர் 5ஆம் தேதி வரை www.ptbe.tnea.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம். மேலும் விபரங்கள் அறிய 0422-2574071, 2574072 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Categories