Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே… இலவச UPSC, TNPSC பயிற்சி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் மாணவர்களுக்காக UPSC, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி அமைச்சகம் சங்கர் ஐஏஎஸ் அகாடமி உடன் இணைந்து எஸ் சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. அதுமட்டுமன்றி மாத உதவித் தொகையும் வழங்கி வருகிறது. படிப்பு திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக இந்த இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதனை மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் http://www.shankariasacademy.com/free-ias-coaching என்ற இணையதளத்திலும், 9444166435, 7667766266 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |