முதல்முறையாக இந்தி மொழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நமது இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடப்புத்தகங்களை நேற்று மத்திய உள்துறை மந்திரி வெளியிட்டார். இது குறித்து இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியதாவது. நமது இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. இதனால் தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு அமைந்துள்ள அரசு கல்லூரியில் மருத்துவம் படிக்க வருவார்கள். அவர்களுக்கு இந்தியில் சரளமாக பேசுவது கடினம். . இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மேலும் எம்.பி.பி.எஸ். என்பது அடிப்படை பட்ட படிப்பு அல்ல. உயிராபத்தான சூழலில் மருத்துவர்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டும் அவர்கள் பணியாற்ற முடியாது.
இந்தியில் மருத்துவ படித்தால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே போய் மேற்படிப்பு படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் முடியாது. மேலும் உலக சுகாதார அமைப்பு, யூனிசெப் போன்ற மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால் அவை அனைத்தும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. மேலும் அவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புடன் நிறுத்த மாட்டார்கள் அதை முடித்த உடனையோ அல்லது பின்னரோ அவர்கள் உயர் படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள் மாநில மொழிகளில் வரவேண்டிய தேவை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.