சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் மாணவர்களது வாழ்க்கை அவரது கைகளில் தான் உள்ளது. ரூல்ஸ் வீடியோகளுக்காக ரயில்களில் மேலே ஏறுவது, ரயிலின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது, கத்தி மற்றும் அரிவாள் போன்ற பொருட்களைக் கொண்டு நடைமேடைகளில் விபரீத சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் அதிவீரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.