சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முன்தினம் கணக்கின்படி கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது. இதனையடுத்து நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவ மாணவிகளை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் அதிகரித்து வருகின்ற உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படும் படி கல்வி நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதையே பள்ளிக் கல்வித்துறையும் வலியுறுத்தி உள்ளது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தொற்று அதிகமாக இருக்கும் மண்டலங்களாக கருதப்படும் அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ஒரு மண்டலத்திற்கு 2 என்று மொத்தம் எட்டு நடமாடும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை குழுக்கள் செயல்படுத்தப்பட்ட இருகின்றன. இந்த மண்டலங்களில் சார்ந்த பொதுமக்கள் 1913 உதவி எண்ணில் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு நடமாடும் குழு மூலம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும்