நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 9-11 மாணவர்களுக்கு யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு பொதுத் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் 12 மாதங்களுக்கு மட்டுமே 3ஆம் தேதி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு மே-2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்துமே பள்ளிகளில் நடைபெறும் என்பதால் பள்ளி வளாகங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் 9,10,11, ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதற்காக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் -1 க்கு பின்னர் மாணவர்களுக்கு வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளது.