Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே கட்டாயம் நீட் தேர்வு எழுதுங்க…. தேவநாதன் வாழ்த்து…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தேவநாதன், மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செய்பவர்களை நம்பாமல் நீட் தேர்விற்கு உறுதியாக தயாராகுங்கள். வெற்றி பெறுங்கள் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |