கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் கடந்த வருடம் ஆரம்பித்து இன்றுளவும் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் தற்போது நடைபெறும் செய்முறைத் தேர்வுகளை எழுத முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தங்களது செய்முறைத் தேர்வுகளை எழுத முடியாது என கவலை கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் மாதம் அல்லது அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிந்த பின்னரோ நடத்தப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி சார்பாக கூறும்போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத முடியாததால் மதிப்பெண்கள் குறித்து வருத்தத்தில் இருந்ததாகவும், தற்போது சிபிஎஸ்இ அறிவிப்பு மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஆறுதல் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.