Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…! குரூப்-4 தேர்வு பாடத்திட்டம்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது

இந்தநிலையில் குரூப்-4 தேர்வில் முந்தைய வருடம் பழைய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த ஆங்கில பாடம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து TNPSC அதிகாரி ஒருவர் கூறுகையில், பழைய பாடத்திட்டம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதியதாக பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம் பெறும். பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |